ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி! ஓங்கி
அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி! நேர்வார்
ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.