மூவாய், பிறவாய், இறவாய், போற்றி! முன்னமே
தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி! அல்லல்
நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.