முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி! மூவாத மேனி
முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி! ஆறு ஏறு
சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி! என் சிந்தை
நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி! கயிலை மலையானே,
போற்றி போற்றி!.