திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: போற்றித் திருத்தாண்டகம்

உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி! ஒள்
எரி வீசும் பிரானே, போற்றி!
படரும் சடைமேல் மதியாய், போற்றி! பல்கணக்
கூத்தப்பிரானே, போற்றி!
சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி! தோன்றி
என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.

பொருள்

குரலிசை
காணொளி