ஆறு ஏறு சென்னி முடியாய், போற்றி! அடியார்கட்கு
ஆர் அமுது ஆய் நின்றாய், போற்றி!
நீறு ஏறும் மேனி உடையாய், போற்றி! நீங்காது
என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கூறு ஏறும் அம் கை மழுவா, போற்றி! கொள்ளும்
கிழமை ஏழ் ஆனாய், போற்றி!
காறு ஏறு கண்டம்-மிடற்றாய், போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.