பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள் நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார் “திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட, அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.