திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்! படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்!
தண் ஆர் அகிலும், நல சாமரையும், அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடம் ஆடும்(ம்) மணி அரங்கில்
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

பொருள்

குரலிசை
காணொளி