திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

கடம் மா களியானை உரித்தவனே! கரிகாடு இடமா, அனல் வீசி நின்று
நடம் ஆட வல்லாய்! நரை ஏறு உகந்தாய்! நல்லாய்! நறுங்கொன்றை நயந்தவனே!
படம் ஆயிரம் ஆம் பருத் துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும்
விட வார் அரவா! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

பொருள்

குரலிசை
காணொளி