“வஞ்சி நுண் இடையார் மயில் சாயல் அன்னார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே” என்று தான் விரும்பி,
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர் கோன்-வனப் பகை அப்பன், வன் தொண்டன்- சொன்ன
செஞ்சொல்-தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே! .