திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்;
சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்த-
தும் தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.

பொருள்

குரலிசை
காணொளி