திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம்
வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து,
மந்திர மா முனிவர், “இவன் ஆர்?” என,-எம்பெருமான்
“நம்தமர் ஊரன்” என்றான்நொடித்தான்மலை உத்தமனே.

பொருள்

குரலிசை
காணொளி