திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா
முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி,
காளத்தி, வாட்போக்கியும்,
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான்
பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே,
எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக்கடல் நீந்தல் ஆம்,
காரணமே.

பொருள்

குரலிசை
காணொளி