நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல், நெடுவாயில்,
குறும்பலா, நீடு திரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலை
உஞ்சேனைமாகாளம், வாய்மூர்,
கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்வண்ணனும் மா
மலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு,
என்று சொல்லிக் குலாவுமினே!