திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள்
ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம்
ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர்
கோகரணமே

பொருள்

குரலிசை
காணொளி