முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி,
ஆல நிழல்வாய்,
மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சமயங்களை வகுத்தவன் இடம்
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி,
மதகைக்
குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி
கோகரணமே.