திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள்
அலற,
விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும்
இடம் ஆம்
புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர,
அதன்மேல்
குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய்
கோகரணமே.

பொருள்

குரலிசை
காணொளி