பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி,
அமரர்
வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும்
இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா
மலர்கள் தூய்,
கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர்
கோகரணமே.