பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த, பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்- சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக, அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே.