பிணி நீர சாதல், பிறத்தல், இவை பிரியப் பிரியாத பேர்
இன்பத்தோடு
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில், அறிமின்! குறைவு
இல்லை; ஆன் ஏறு உடை
மணி நீலகண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து
வாழும்
துணி நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
தொழுமின்களே!