திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை
ஒழியத் தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும்
நினைமின்!சென்னிப்
பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான்
பிரியாத நீர்த்
துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
தொழுமின்களே!

பொருள்

குரலிசை
காணொளி