ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய
வாழ்க்கை ஒழியத் தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில்
மயங்காது, நீர்
மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும்
முகில் தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
தொழுமின்களே!