மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து
அழியும் ஆறுஆதலால்,
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா;
விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய்
துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
தொழுமின்களே!