திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண்
பவளநிற
நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு
ஆதல் முன்,
பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த
புன்சடையினான்உறையும்
தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
தொழுமின்களே!

பொருள்

குரலிசை
காணொளி