வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து,
வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது
ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்;
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல்
உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
ஆமாத்தூர் ஐயனாரே!.