கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி, கடிய
விடை ஏறி-காபாலி(ய்)யார்-
இட்டங்கள் தாம் பேசி, இல்லே புக்கு, இடும்
பலியும் இடக் கொள்ளார்;போவார் அல்லர்;
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்;பார்ப்பாரைப்
பரிசு அழிப்பார் போல்கின்றார், தாம்;
அட்டிய சில்பலியும் கொள்ளார்;விள்ளார் -
அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.