“ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு;
ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்!
நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்?
நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்;
என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்;
இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ?
அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு;
”-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.