திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன்
காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்;
கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்;
கெடுப்பார் மற்று இல்லாதான் காண்;
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன்
கயிலை மேவினான் காண்;
வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல்
சூழ் கோகரணம் மன்னினானே.

பொருள்

குரலிசை
காணொளி