பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன்
காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்;
கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண்,
கையில் கபாலம் ஏந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண்,
பாணி ஆக நின்று;
மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ்
கோகரணம் மன்னினானே.