திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

ஆறு ஏறு செஞ்சடை எம் ஆரூரன் காண்; அன்பன் காண்;
அணி பழனம் மேயான் தான் காண்;
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண்; நிருபன் காண்;
நிகர் ஒன்றும் இல்லாதான் காண்;
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண்;
கொக்கரையான் காண்; குழு நல் பூதத்தான் காண்;
மாறு ஆய மதில்மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல்
சூழ் கோகரணம் மன்னினானே.

பொருள்

குரலிசை
காணொளி