பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்;
பிறப்பு ஒன்று இல்லாதான் காண்;
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று
உகந்த முதல்வன் தான் காண்;
இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும்
ஏழ் உலகும் ஆயினான் காண்;
மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ்
கோகரணம் மன்னினானே.