திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர்
தம் பெருமான் காண்; மேவில் எங்கும்
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை
வேல் சூலத்து எம் கோலத்தான் காண்;
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன்
காண்; இமையோர்கள் ஏத்த நின்று,
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ்
கோகரணம் மன்னினானே.

பொருள்

குரலிசை
காணொளி