திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச்
செவ்வே திரிந்து, “ஆயோ!” எனப் போகாவிட, விளிந்து,
கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச்
செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே.

பொருள்

குரலிசை
காணொளி