பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல் திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த அரவம்ஆட அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.