பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து, கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.