பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான், கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.