திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

சித்தத்து உருகி, “சிவன், எம்பிரான்” என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்-
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!

பொருள்

குரலிசை
காணொளி