பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம், தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை, பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த, மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே.