பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென் கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்; சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து, அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே.