பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால் வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக் கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.