திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: செவ்வழி

முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர்,
"எந்தைபெம்மான்!" என நின்று இறைஞ்சும் இடம்
என்பரால்
மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக்
கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.

பொருள்

குரலிசை
காணொளி