திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

பற்று அற்றார் சேர் பழம் பதியை, பாசூர் நிலாய பவளத்தை,
சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்கு அரிய திரு உருவை,
வெற்றியூரில் விரிசுடரை, விமலர்கோனை, திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.

பொருள்

குரலிசை
காணொளி