பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த, தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி, அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே.