பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர் கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்; கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால் ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே.