திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

“வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!” என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

பொருள்

குரலிசை
காணொளி