திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

“எஞ்சல் இல் புகல் இது” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு
“அஞ்சல்!” என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

பொருள்

குரலிசை
காணொளி