முடித்தவன் காண்; வன்கூற்றை; சீற்றத் தீயால்
வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன் காண்; பிஞ்ஞகன் ஆம் வேடத்தான்
காண்; பிணையல் வெறி கமழ் கொன்றை, அரவு, சென்னி
முடித்தவன் காண்; மூ இலை நல் வேலினான் காண்;
முழங்கி உரும் எனத் தோன்றும் மழை ஆய் மின்னி
இடித்தவன் காண்; எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.