திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

“வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான் காண்;
வேதத்தின் பொருளான் காண்” என்று இயம்பி,
விம்மா நின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்;
விடை ஏறித் திரிவான் காண்; நடம் செய் பூதத்து
அம்மான் காண்; அகலிடங்கள் தாங்கினான் காண்;
அற்புதன் காண்; சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி