ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா;
அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான்
காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்;
காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம்,
கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே!
சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.