கானவன் காண், கானவனாய்ப் பொருதான் தான் காண்,
கனல் ஆட வல்லான் காண், கையில் ஏந்தும்
மானவன் காண், மறை நான்கும் ஆயினான் காண்,
வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான் தான் காண்,
ஊனவன் காண், உலகத்துக்கு உயிர் ஆனான் காண், உரை
அவன் காண், உணர்வு அவன் காண்,
உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.