பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
தனதன்நற் றோழா ! சங்கரா ! சூல பாணியே ! தாணுவே ! சிவனே ! கனகநற் றூணே ! கற்பகக் கொழுந்தே ! கண்கள்மூன் றுடையதோர் கரும்பே ! அனகனே ! குமர விநாயக சனக ! அம்பலத் தமரர்சே கரனே ! நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே.